திருச்செந்தூர் கடற்கரையில் திடீரென தோன்றிய முருகன் சிலையால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றான இரண்டாம் படைவீடு திருச்செந்தூர். அங்கு சஷ்டியை முன்னிட்டு நடைபெறும் சூரசம்ஹாரம் மிகவும் பிரபலமானது. இந்த கோவிலில் கடற்கரையில் கடந்த சில வாரங்களாக சிற்ப வேலைப்பாடுகளுடன் கூடிய முருகனின் கற்சிலை ஒன்று கடற்கரை மணலில் பாதி புதையுண்ட நிலையில் கிடந்துள்ளது. தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் அந்த கடற்கரையில் நீராடி முருகனை வழிபட்டு செல்கிறார்கள்.
ஆனால் இந்த மணல் பகுதியில் திடீரென காணப்படும் முருகனின் சிறிய கற்சிலையால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கோவில் நிர்வாகம் விரைவாக இந்த முருகன் சிலையை அறநிலையத் துறையிடம் ஒப்படைக்க வேண்டும். இல்லையென்றால் இந்த சிலையை தொல்லியல் துறையிடம் ஒப்படைக்க வேண்டும் என்று பக்தர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.