திருச்செந்தூர் முருகன் கோவில் இந்த வருடம் கந்த சஷ்டி வரும் 4ஆம் தேதி துவங்கி 15 ஆம் தேதி முடிவடைய உள்ளது. சூரசம்காரம், திருக்கல்யாணம் உள்ளிட்ட அனைத்து நிகழ்ச்சிகளுமே யூடியூப் மற்றும் தொலைக்காட்சிகளில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படும். இதனை மக்கள் கண்டு களிக்கலாம். மேலும் தினமும் 10 ஆயிரம் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய ஆன்லைன் முன்பதிவு அடிப்படையில் அனுமதியளிக்கப்படுகிறது. இதில் பல லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்கின்றனர்.
திருக்கல்யாணம் 7ஆம் திருநாளன 31ஆம் தேதி திங்கட்கிழமை இரவில் சுவாமி குமரவிடங்க பெருமானுக்கும், தெய்வானை அம்பாளுக்கு திருக்கல்யாணம் நடக்கிறது. இது குறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் சேகர்பாபு, திருச்செந்தூரில் பக்தர்கள் விரதம் இருக்க கூடுதல் கொட்டகைகள் அமைக்கப்படும். 6 இடங்களில் பெரிய அகன்ற திரைகள் மூலம் கந்தசஷ்டி அனைத்து நிகழ்வுகளும் ஒளிபரப்பப்படும். இவ்வாறு கூறினார்.