திருச்செந்தூர் முருகன் கோவிலில் சஷ்டி திருவிழா வரும் 4ஆம் தேதி தொடங்கி நவம்பர் 15ஆம் தேதி தேதி முடிவடைய இருக்கிறது. இந்த விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் நிகழ்ச்சி ஒன்பதாம் தேதி நடைபெற உள்ளது. இதனைத்தொடர்ந்து பத்தாம் தேதி திருக்கல்யாணம் நடைபெறுகிறது. இந்த நிலையில், இந்த இரண்டு தினங்களும் கோவிலில் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை என்று தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
கொரோனா பரவல் காரணமாக கடந்த வருடத்தைப் போலவே இந்த வருடமும் பக்தர்கள் இல்லாமல் சூரசம்ஹாரம் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் நவம்பர் 4 முதல் 8ஆம் தேதி வரை மற்றும் 11 முதல் 15 ஆம் தேதி வரை தினமும் காலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை பக்தர்கள் தரிசனம் செய்யவும் அனுமதி தரப்பட்டுள்ளது.