Categories
அரசியல் தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

திருச்செந்தூர் சட்டமன்ற தொகுதி: மக்களின் எதிர்பார்ப்புகள் என்ன ?

திருச்செந்தூர் முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாகக் விளங்குகிறது. திருச்செந்தூர், குலசேகரபட்டினம் ஆன்மீக தலங்களாகவும், மணப்பாடு மற்றும் காயல்பட்டினம் சுற்றுலா தலங்களாகவும் விளங்குகின்றது. விவசாயமும், மீன் பிடித்தலும் முக்கிய தொழில்களாக உள்ளன. திருச்செந்தூர் சட்டமன்ற தொகுதியில் திமுக 7 தேர்தல்களில் வென்று கைப்பற்றியுள்ளது. அதிமுக 6 முறையும், காங்கிரஸ் 3 முறையும் வெற்றி பெற்றுள்ளன.

தற்போதய எம்எல்ஏ திமுகவின் அனிதா ராதாகிருஷ்ணன். திருச்செந்தூர் சட்டமன்ற தொகுதியின் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 2,43,375 ஆகும். நாள்தோறும் ஆயிரக்கணக்கானோர் வந்து செல்லும் ஆன்மிக தளமான திருச்செந்தூரில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும் என்பது நீண்ட கால கோரிக்கையாக உள்ளது. முக்கிய சாலைகள் குண்டும், குழியுமாக காட்சி அளிப்பதாகவும், 10 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட பாதாளசாக்கடை திட்டம் இன்னும் முடிவடையவில்லை என்று மக்கள் கூறுகின்றனர்.

பாதுகாக்கப்பட்ட குடிநீர் தேவை என்பதும் முக்கிய முக்கியமான கோரிக்கையாக தொடர்கிறது. ஆலந்தலைப் பகுதியில் தூண்டில் வளைவு அமைக்க வேண்டும் என்பது நீண்ட காலமாக கோரிக்கையாக மட்டுமே இருந்த நிலையில் தற்போது தூண்டில் வளைவு அமைக்கப்பட்டு வருகிறது. குலசேகரப்பட்டினம், காயல்பட்டினம் போன்ற கடற்கரை பகுதிகளை சுற்றுலா மையங்களாக மேம்படுத்த வேண்டும் என்று மக்கள் வலியுறுத்துகின்றனர். மணப்பாடு சுற்றுலா மையமாக அறிவிக்கப்பட்ட பிறகும் அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்படவில்லை என்று புகார் உள்ளது.

Categories

Tech |