Categories
மாநில செய்திகள்

திருச்செந்தூர் பக்தர்களுக்கு புதிய வசதி….. அமைச்சர் வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு….!!!!

திருச்செந்தூரில் பக்தர்கள் விரதம் இருக்க கூடுதல் கொட்டகைகள் அமைக்கப்படும் எனவும் ஆறு இடங்களில் பெரிய அகன்ற திரைகள் மூலம் கந்த சஷ்டி அனைத்து நிகழ்வுகளும் ஒளிபரப்பப்படும் என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்த சஷ்டி விழா வருகின்ற 25ஆம் தேதி தொடங்குகின்றது. இந்த திருவிழா திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் வருடம் தோறும் கந்த சஷ்டி திருவிழா சிறப்பாக கொண்டாடப்படும்.

வருகின்ற 25ஆம் தேதி விழா தொடங்க உள்ள நிலையில் அன்று அதிகாலை ஒரு மணிக்கு நடை திறக்கப்பட்டு அனைத்து பூஜைகளும் நடைபெறும் .இது தொடர்பாக செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அமைச்சர் சேகர்பாபு, திருச்செந்தூரில் பக்தர்கள் விரதம் இருக்க கூடுதல் கொட்டகைகள் அமைக்கப்படும்,ஆறு இடங்களில் பெரிய அகன்ற திரைகள் மூலம் கந்த சஷ்டி அனைத்து நிகழ்வுகளும் ஒளிபரப்பப்படும் என அமைச்சர் தெரிவித்துள்ளது பக்தர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |