நாடு முழுவதும் கடந்த வருடம் மார்ச் முதல் கொரோனா கோரத்தாண்டவமாடியது. இதையடுத்து கொரோனா அதிகமாக பரவி வந்ததால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கும் நிலை ஏற்பட்டது. இதையடுத்து கொரோனா சற்று குறைந்த நிலையில் ஊரடங்கில் தளர்வுகள் கொண்டு வரப்பட்டதால் மீண்டும் இயல்பு வாழ்க்கைக்கு மெல்ல மெல்ல திரும்பி வருகின்றனர். இதற்கு மத்தியில் கொரோனா மீண்டும் வேகமெடுத்து வருகிறது.
மேலும் தடுப்பூசி போடும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் பல்வேறு மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. அந்தவகையில் தமிழகத்திலும் சில கட்டுப்பாடுகள் கொண்டு வரப்பட்டுள்ளன. இந்நிலையில் கொரோனா பரவலை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு வரும் பக்தர்கள் மாஸ்க் அணியாவிட்டால் அனுமதி கிடையாது என்று கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. மேலும் கோயிலுக்கு வரும் பக்தர்கள் கைகளை நீரில் சுத்தம் செய்துவிட்டு கிருமி நாசினி பயன்படுத்தினால் தான் அனுமதி வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளது.