Categories
Uncategorized தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

திருச்செந்தூர் முருகன் கோவிலில்…. நாளை முதல் பக்தர்களுக்கு சூப்பர் அறிவிப்பு!!

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நாளை முதல் இரவு 8 மணி வரை பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா தொற்றின் தாக்கம் சற்று குறைந்த பிறகு கட்டுப்பாடுகளுடன் தளர்வுகள் அளிக்கப்பட்டன. அதில்,கோவில்களுக்கு கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி கட்டுப்பாடுகளுடன் செல்வதற்கு பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டு வந்தது. குறிப்பாக திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில்களில் பக்தர்களுக்கு நேரக்கட்டுப்பாடு விதிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நாளை முதல் இரவு 8 மணி வரை பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்படுவதாக திருக்கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. அதாவது, அதிகாலை 5 மணி முதல் மாலை 6 மணி வரை பக்தர்களுக்கு அனுமதி வழங்கி வந்த நிலையில், கூடுதலாக 2 மணி நேரம் தரிசனம் செய்ய மக்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது..

Categories

Tech |