திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் உள்ள சிலைகளை புகைப்படம் எடுப்பது சிலை திருட்டுக்கு வழி வகுப்பதாக அந்த கோவில் அர்ச்சகர் ஒருவர் மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் உள்ளே செல்போன் பயன்படுத்த தடை விதிக்க வேண்டி இந்து சமய அறநிலையத்துறை ஆணையருக்கு உத்தரவிட்டனர். அதன்படி திருச்செந்தூர் முருகன் கோயிலுக்குள் செல்போன் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், பக்தர்களின் செல்போனை பாதுகாக்க பாதுகாப்பு அறை திறக்கப்பட்டுள்ளது.
இதில் ஒரு செல்போனிற்கு 5 கட்டணமாக வசூலிக்கப்படும் என்று அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார். மேலும், திருச்செந்தூர் பஸ் நிலையம், ரயில் நிலையங்களில் இருந்து முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் கோயிலுக்கு வர இலவச வாகனங்கள் இயக்கப்படுகிறது என்றார்.