Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

திருச்செந்தூா், ஆறுமுகனேரி உள்ளிட்ட பகுதிகளில் இன்று (ஜூன் 10) மின்தடை…!!

திருச்செந்தூா், உடன்குடி, ஆறுமுகனேரி உள்ளிட்ட பகுதிகளில் இன்று மின்தடை என அறிவிக்கப்பட்டுள்ளது.

திருச்செந்தூா் கோட்டத்துக்குட்பட்ட திருச்செந்தூா், சாத்தான்குளம், உடன்குடி, ஆறுமுகனேரி மற்றும் நாசரேத் பகுதிகளில் இன்று வெள்ளிக்கிழமை (ஜூன் 10) மின் தடை செய்யப்படுகிறது. இதுகுறித்து திருச்செந்தூா் மின் விநியோக செயற்பொறியாளா் செ.விஜயசங்கரபாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில், திருச்செந்தூா், சாத்தான்குளம், உடன்குடி, ஆறுமுகனேரி மற்றும் நாசரேத் உள்ளிட்ட பகுதிகளில் மின்பாதைகளில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட இருக்கிறது.

இதன் காரணமாக வீரபாண்டியன்பட்டினம் , ராஜ்கண்ணா நகா், காயல்பட்டினம் ரோடு, தேரிக் குடியிருப்பு, பூச்சிக்காடு, காயாமொழி, மேலகானம், செங்குழி, மானாடு, செட்டிவிளை, சோலை குடியிருப்பு, குரும்பூா், அழகப்பபுரம், நல்லூா், வீரமாணிக்கம், அம்மன்புரம் வள்ளிவளை, சுகந்தலை ஆகிய பகுதிகளில் காலை 9 மணிமுதல் பிற்பகல் 1 மணிவரை மின் விநியோகம் நிறுத்தப்படும்..

மேலும் பன்னம்பாறை, தோப்புவளம், முத்துகிருஷ்ணாபுரம், முதலூா், சுப்புராயபுரம், கண்டு கொண்டான்மாணிக்கம், கருவேலம்பாடு, ஆனந்தபுரம், பழங்குளம், அறிவான்மொழி, அம்பலச்சேரி, கட்டாரிமங்கலம் , தேரிப்பனை, வைத்தியலிங்கபுரம், பிடானேரி, தைலாபுரம், பாலசுப்பிரமணியபுரம், தென்திருப்பேரை, குரங்கணி, மஞ்சுவிளை, கோட்டுா், வேப்பங்காடு, அடைக்கலாபுரம், வாகைவிளை, ராமசாமிபுரம், சிவலூா், கொட்டங்காடு, ஞானியாா் குடியிருப்பு, கொம்மடிக்கோட்டை, சொக்கன்குடியிருப்பு, உடைபிறப்பு, படுக்கப்பத்து, அழகப்பபுரம், பிச்சிவிளை, வெயிலுகந்தம்மன்புரம் மற்றும் மரையன் கல்லூரி பகுதி ஆகிய பகுதிகளில் இன்று (ஜூன் 10) காலை 9 மணியிலிருந்து பிற்பகல் 1 மணிவரை மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படும் என  தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |