Categories
உலக செய்திகள்

திருடப்பட்ட நாணயம்… 3 வருடங்களுக்கு பிறகு…. கண்டுபிடித்த தருணம்….!!

3 வருடங்களுக்கு முன்பு திருடப்பட்ட விலை மதிப்புள்ள நாணயங்கள் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 

கனடாவில் நாணயங்கள் தயாரிக்கும் நிறுவனம் the big maple leaf  தங்க நாணயங்களை 2007ம் ஆண்டில் தயாரித்துள்ளது.  இதில் ஒவ்வொரு நாணயமும் சுமார் 100 கிலோ எடை உடையது. மேலும் 53 சென்டிமீட்டர் விட்டம் மற்றும் 3 சென்டி மீட்டர் தடிமன் உடையது. இவை அனைத்தும் கனடாவில் ஒரு மில்லியன் டாலர் மதிப்பு உடையவை இவற்றின் தற்போதைய மதிப்பு  5.8 மில்லியன் டாலர்கள். பெர்லின் நகரில் உள்ள pode என்கிற அருங்காட்சியகத்தில் ஒரு தங்க நாணயம் வைக்கப்பட்டிருந்துள்ளது.

இந்நிலையில் 2017 ஆம் வருடம் இந்த நாணயம் திருடப்பட்டுவிட்டது. இந்த நாணயம் திருடப்பட்டு மூன்று வருடங்கள் கடந்த பின்பும் அதனைக் கண்டுபிடிக்க முடியவில்லை. இதனை  வருடக்கணக்காக  தேடி வந்த காவல்துறையினர் இதை திருடிச் சென்றவர்கள் நாணயத்தை உருக்கி கடைகளில் விற்றிருப்பார்கள் என்று சந்தேகித்தனர். இதனால் நகைக்கடைகளில்  சோதனையில் ஈடுபட்டு வந்துள்ளனர். இந்நிலையில் நாணயத்தை திருடியவர்கள் கிடைக்காத நிலையில் போலியான பணம் மற்றும் நாணயங்களை காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர்.  இருப்பினும் எவரையும் இதுவரை கைது செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |