Categories
மாநில செய்திகள்

திருடர்கள் வசிக்கும் ஊரில் தீரன் பட பாணியில் சிக்கி மீண்ட போலீஸ்காரர்கள்..!!

சென்னையில் கடந்த ஒரு வருடமாக மூதாட்டியார்களை குறிவைத்து நூதன முறையில் திருடும் 3ஆட்டோ ராணிகள் போலீசாரிடம் சிக்காமல் தப்பித்து வந்தனர் .

ஆட்டோ ராணிகள் தனியாக நிற்கும் மூதாட்டிகளை ஆட்டோவில் ஏற்றி கொண்டு உதவுவது போல நடித்து அவர்களின் தங்கநகைகளை திருடி வந்தனர் .இதே பாணியில் 10-க்கும் மேற்பட்ட சம்பவங்களில் ஈடு பட்டு வந்த இந்த ஆட்டோ ராணிகள் கடந்த 3-ஆம் தேதி பெரம்பூரில்  ஒரு மூதாட்டியிடம் கைவரிசையை காட்டியதைத் தொடர்ந்து தனிப்படை அமைக்கப்பட்டது.

ஆட்டோ ராணிகள் தான் என்று மூதாட்டி கொடுத்த தகவலின் பேரில் சி.சி.டி.வியில் சிக்கிய அடையாளங்களை வைத்தும், குற்ற ஆவண காப்பகத்தின் உதவியுடன் போலீசார் தேடியபோது அவர்கள் ஆந்திராவைச் சேர்ந்தவர்கள் என்பது கண்டு பிடிக்கப் பட்டது. இதனையடுத்து ஆட்டோ ராணிகளை பிடிக்க புளியன்தோப்பு ஆய்வாளர் கிருஷ்ணமூர்த்தி செம்பியன் ஆய்வாளர் பரணிகுமார் ஆகியோர் அடங்கிய தனிப்படை ஆந்திர மாநிலம் சித்தூர் குப்பம் என்ற இடத்திற்கு விரைந்தனர் .

aatto ranikal chennai க்கான பட முடிவு

போலீஸ் எனத்தெரியாமல் இருக்க மாறுவேடத்தில் சென்ற போலீஸ்காரர்களை சுமார் 200குடும்பங்களைக்கொண்ட அந்த கிராமத்தினர் போலீசாரை சுற்றி வளைத்தனர். வந்திருப்பது போலீஸ் என தெரிந்தும் அவர்களை ஊருக்குள் அனுமதிக்காமல் தீரன் பட பணியில் நகைகளை வேண்டுமானால் கொண்டு செல்லுங்கள். ஆனால் யாரையும் கைது செய்யாதீர்கள் என்று கூறினர்.

Categories

Tech |