Categories
தேசிய செய்திகள்

திருடியதாக கூறி 10 வயது சிறுவனை… கொடூரமாக கொலை செய்த கடை உரிமையாளர்… நெஞ்சை பதற வைக்கும் சம்பவம்..!!

10 வயது சிறுவன் ஒருவன் கடையில் பணத்தை திருடியதாக கூறி கடை உரிமையாளர் அவரை கொடூரமாக தண்டனை கொடுத்து கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடகா மாநிலம், காவிரி மாவட்டத்தை சேர்ந்த நாகையா என்பவரின் மனைவி ஜெயஸ்ரீ. இவர்களுக்கு 10 வயது மகன் உள்ளனர். இவர் கடந்த மார்ச் 16-ம் தேதி அந்த சிறுவன் அருகில் உள்ள கடைக்கு சென்றுள்ளார். நீண்ட நேரம் ஆகியும் அவன் வீட்டுக்கு வராத காரணத்தினால் பெற்றோர்கள் அங்கு சென்று பார்த்தனர். அப்போது சிறுவன் கடையின் ஓரத்தில் அமர்ந்து இருந்தான். இதையடுத்து  கடை உரிமையாளரிடம் கேட்டபோது அவன் தன்னுடைய பணத்தை திருடிவிட்டு இல்லை என்று  கூறினார்.

இதனால் சிறுவனின் முதுகில் கனமான கற்களையும் சுமக்க வைத்து தண்டனை கொடுத்துள்ளார். பெற்றோர்கள் அவரிடம் கெஞ்சி பார்த்தும் அதை காதில் வாங்காமல் மாலை வரை அவன் அங்கேயே நிற்க வேண்டும் என்று கூறியுள்ளார். இதையடுத்து அந்த சிறுவனை மீட்ட பெற்றோர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். இந்நிலையில் அந்த சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சிறுவன் மருத்துவமனை படுக்கையில் இருந்தபோது தனக்கு நடந்த சம்பவத்தை கூறியுள்ளார். இதையடுத்து குற்றம்சாட்டப்பட்ட கடை உரிமையாளரை போலீசார் கைது செய்தனர்.

Categories

Tech |