Categories
தேசிய செய்திகள்

திருடுவதற்கு பொருளே கிடைக்கலையா…?” காயப்போட்டிருந்த உள்ளாடையை ஆட்டையை போட்ட இளைஞர்”… வேடிக்கையான சம்பவம்..!!

உத்தரப் பிரதேசத்தில் ஒரு பெண்ணின் உள்ளாடையை திருடிச் சென்ற நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.

உத்திரப்பிரதேசத்தின் மீரட் நகரில் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் வசித்து வரும் சஞ்சய் சவுத்ரி என்பவர் கடந்த மார்ச் மாதம் 19தேதி ஒரு புகாரை அளித்தார். அதில் தனது மகளின் உள்ளாடைகளை இரண்டு வாலிபர்கள் திருடி சென்றதாகவும் அதற்கு ஆதாரம் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். இதையடுத்து அதை விசாரித்த போலீசார் அந்த வீடியோவை வைத்து குற்றவாளியை தேடி வந்தனர்.

அதில் இரண்டு இளைஞர்கள் ஸ்கூட்டரில் ஒன்றில் வந்து அதில் ஒருவர் இறங்கி செல்கின்ற நேரத்தில் மற்றொரு வாலிபர் ஸ்கூட்டரை நிறுத்திவிட்டு சவுத்ரியின் வீட்டில் வாசலில் காயப்போட்டிருந்த உள்ளாடையை திருடி சென்றுள்ளது தெரிய வந்தது. இதையடுத்து அவர் ஸ்கூட்டியை வேகமாக எடுத்துக் கொண்டு சென்றுவிட்டார் .விசாரணை நடத்திய போலீசார் 2 வாலிபர்களையும் கைது செய்தனர். இந்த திருட்டு சம்பவம் மிகவும் வேடிக்கையாக உள்ளது.

Categories

Tech |