Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

திருடு போன மோட்டார் சைக்கிள்…. இன்சூரன்ஸ் பணம் தர மறுத்த நிறுவனத்திற்கு அபராதம்…. நீதிமன்றம் அதிரடி…!!!

செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள பூஞ்சேரி-தண்டரை பகுதியில் ரஹத் அகமது கான் என்பவர் வசித்து வருகிறார் இவரது மோட்டார் சைக்கிள் கடந்து 2019-ஆம் ஆண்டு காணாமல் போனது. அதனை கண்டுபிடித்து தருமாறு ரஹத் கல்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். 6 மாதம் கழித்தும் மோட்டார் சைக்கிளை கண்டுபிடிக்க இயலவில்லை. இதனால் இழப்பீடு கேட்டு ரஹத் இன்சூரன்ஸ் நிறுவனத்தை அணுகியுள்ளார். அப்போது பாதுகாப்பு இல்லாத இடத்தில் நிறுத்திவிட்டு மோட்டார் சைக்கிள் திருடு போனதற்கு இழப்பீடு வழங்க முடியாது என அந்த நிறுவனத்தின் தெரிவித்தனர்.

இதுகுறித்து ரஹத் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கினை விசாரித்த நுகர்வோர் நீதிமன்ற தலைவர் காசிபாண்டியன், உறுப்பினர் ஜவஹர் ஆகியோர் இன்சூரன்ஸ் நிறுவனத்திற்கு 36 ஆயிரத்து 450 ரூபாய் பணத்தை 9 சதவீத வட்டியுடன் வழங்க வேண்டும் என உத்தரவிட்டனர். மேலும் வழக்கு செலவு தொகை 15 ஆயிரம் ரூபாய், மன உளைச்சல் ஏற்படுத்தியதற்காக 50 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும் எனவும் உத்தரவு பிறப்பித்தனர்.

Categories

Tech |