Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“திருடு போன ரூ 1 கோடி மதிப்பிலான பொருட்கள்”… மீட்டு உரியவரிடம் ஒப்படைத்த போலீஸ் கமிஷனர்…!!!

திருட்டுப்போன ரூ 1 கோடி மதிப்பிலான பொருட்கள் மீட்கப்பட்டு உரியவரிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

சென்னை, தாம்பரம் மாநகர போலீஸ் கமிஷனர் ரவி கடந்த ஐந்து மாதங்கள் மட்டுமல்லாது 2021 ஆம் வருடம் முதல் நிலுவையில் இருந்த வழக்குகள் அனைத்தையும் கண்டுபிடித்தார். திருட்டுப்போன ரூ ஒரு கோடி மதிப்புள்ள நகைகள், பைக்குகள், செல்போன்கள் அனைத்தையும் மீட்டு உரியவரிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி நடைப்பெற்றது. மேலும் இந்த நிகழ்ச்சியில் கூடுதல் கமிஷனர் காமினி, துணை கமிஷனர்கள் சிபிசக்கரவர்த்தி, குமார், சுப்புலட்சுமி, மூர்த்தி, கூடுதல் துணை கமிஷனர் பொற்செழியன், ஆனந்தகுமார் உட்பட பலர் பங்கேற்றனர்.

அதன்பின்  போலீஸ் கமிஷனர் ரவி நிருபர்களிடம் பேசியதாவது, சென்னை புறநகர் பகுதிகளில் ரவுடி, கட்டப்பஞ்சாயத்து ஒழிப்பதற்கு தாம்பரம் மாநகர கமிஷனராக அமைக்கப்பட்டுள்ளது. கடந்த ஐந்து மாதங்களில் 402 ரவுடிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இரண்டு காவல் மாவட்டங்களில் 23 கொலைகள் நடந்தது. அதில் 43 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். மேலும் 87 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்கள். எந்தவித குற்றங்களிலும் ஈடுபட மாட்டோம் என்று பிணை உறுதிமொழிப் பத்திரத்தை 750 பேரை எழுதி கொடுத்துள்ளார்கள்.

தாம்பரம் கமிஷனரகத்தில் 150 கிலோ கஞ்சா, 2,617 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டன. அதிக ஒலி எழுப்பும் வாகனங்கள் நில மோசடி, இரட்டை நில பத்திரம் தொடர்பான புகார்கள் அதிகமாக வருகின்றது. ஈரோட்டில் அதிக ஒலி எழுப்பி வருகின்ற வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும். வாகனங்களின் பொய்யான நபர்கள் ஸ்டிக்கர் ஒட்டி செல்வதை கண்காணித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.

Categories

Tech |