விக்கிரமங்கலம் பகுதியில் ரகசியமாக மது விற்ற பெண்ணை காவல் துறையினர் கைது செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்ப்படுத்தியுள்ளது.
அரியலூர் மாவட்டத்தில் விக்கிரமங்கலம் பகுதி அமைந்துள்ளது. இந்நிலையில் அப்பகுதியில் உள்ள காவல் துறையினர் கோவிந்தபுத்தூர் சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது மது விற்பதாக காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் பேரில் மேல தெருவை சேர்ந்த ராஜகுமாரி வீட்டில் சோதனை செய்வதற்காக சென்றுள்ளனர்.
அப்போது விற்பனை செய்வதற்காக ராஜகுமாரி வீட்டின் பின்புறம் மது பாட்டில் வைத்திருந்ததை கண்டுபிடித்தது பறிமுதல் செய்தனர். மேலும் காவல் துறையினர் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து ராஜகுமாரியை கைது செய்து காவல் நிலையத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.