புதுக்கோட்டை மாவட்டத்தில் ரோந்து பனியின் போது திருட்டுத் தனமாக மணல் கடத்தி வந்த வாலிபர்களை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள அறந்தாங்கி பகுதியில் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த சரக்கு வாகனத்தை சோதனை செய்த போது அதில் மணல் கடத்தி வந்ததை கண்டுபிடித்துள்ளனர். இதனையடுத்து அந்த வேனில் இருந்தவரிடம் விசாரணை செய்த போது அவர்கள் பெருமாள்பட்டியை சேர்ந்த இளங்கோவன் மற்றும் ராஜேந்திரன் என்பது தெரிய வந்துள்ளது.
இதனை தொடர்ந்து காவல்துறையினர் அவர்களிடமிருந்து மணல் மூட்டைகளை பறிமுதல் செய்ததுடன் இளங்கோவன் மற்றும் ராஜேந்திரன் இருவரையும் கைது செய்து திருட்டுத் தனமாக மணல் கடத்தியதற்க்காக அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.