டெல்லியில் திருட்டு வழிப்பறி கும்பலுக்கு E-FIR மூலம் புகார் அளிக்கலாம் என அம்மாநில அரசு கூறியுள்ளது.
வழிப்பறி திருட்டு உள்ளிட்ட புகார்களை இணையதளம் வாயிலாக தெரிவிக்கலாம் என டெல்லி காவல்துறை கூறியுள்ளது. இதற்காக E-FIR என்ற செயலியை டெல்லி காவல்துறை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த செயலியின் மூலம் திருட்டு அல்லது வழிப்பறி குறித்த குற்றங்களை உடனடியாக சம்பந்தப்பட்டவர்கள் பதிவு செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவ்வாறு புகார் கொடுக்கப்படும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட காவல் நிலைய அதிகாரிகள் இணையதளம் வாயிலாக முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்வார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையின் நகல் மின்னஞ்சல் வாயிலாக காவல்துறை உயர் அதிகாரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் காவல்துறை சார்பில் கூறப்பட்டுள்ளது.