பிரான்ஸ் அதிபர் மேக்ரான் ரஷ்ய அதிபர் புதினை நேரில் சந்திக்கும் போது கொரோனா பரிசோதனையை மேற்கொள்ள மறுத்துள்ளார்.
உக்ரைனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே போர் பதற்றம் அதிகரித்து வருகிறது. இதனால் போர் பதற்றத்தைத் தணிக்க பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் ரஷ்ய அதிபர் புதினை நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தினார். இந்த சந்திப்பு ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் நடைபெற்றது. மேலும் பிரான்ஸ் அதிபர் மேக்ரானுக்கு கொரோனா பரிசோதனை செய்ய ரஷ்ய அதிகாரிகள் கேட்டுள்ளனர்.
இதனை தொடர்ந்து ரஷ்யாவில் பிசிஆர் கொரோனா பரிசோதனையை மேற்கொள்ள பிரான்ஸ் அதிபர் மறுத்துவிட்டார். இதனால் புதினை சந்திக்கும்போது பிரான்ஸ் அதிபர் இருக்கைக்கும் ரஷ்ய அதிபரின் இருக்கைக்கும் இடையே நீண்ட இடைவெளி இருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் ரஷ்யாவில் கொரோனா பரிசோதனை செய்து கொண்டால் தனது டிஎன்ஏ-வை விளாடிமிர் புதின் எடுத்துக் கொள்வார் என்ற எண்ணத்தில் மேக்ரான் இச்சோதனையை செய்து கொள்ளவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.