தனது மகனை கொன்றதற்காக 5 லட்சம் இழப்பீடு கோரி ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார்.
மதுரை மாவட்டத்தில் உள்ள கொச்சடை கிராமத்தில் ஜெயா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கார்த்திக் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் ஜெயா மதுரை ஐகோர்ட்டில் மனு ஒன்று தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் தனது மகன் கார்த்திக்கை பொய்யான திருட்டு வழக்கில் எஸ்.எஸ் காலனி காவல்துறையினர் கைது செய்து விசாரணைக்காக காவல்நிலையத்திற்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு எனது மகனை அடித்து கொடுமைபடுத்தியதால் படுகாயமடைந்த கார்த்திக்கை மீட்டு அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதித்திருந்தோம். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி எனது மகன் பரிதாபமாக உயிரிழந்து விட்டார்.
எனவே சம்மந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஜெயா அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார். இதனை விசாரித்த நீதிமன்றம் வழக்கை சி.பி.சி.ஐ.டி காவல்துறைக்கு மாற்றி உத்தரவிட்டுள்ளது. இதனையடுத்து சி.பி.சி.ஐ.டி காவல்துறையினர் எஸ்.எஸ் காலனி காவல் நிலையத்தில் உள்ள இன்ஸ்பெக்டர் அலெக்ஸ் உள்ளிட்ட 3 பேர் மீது நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர். குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை, ஐந்து லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கி வழங்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.