Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

திருட்டு வழக்கில் கைது…. போலீசாரை தாக்கி கை விலங்கை உடைத்த மக்கள்….!!!!

திருட்டு வழக்கில் ஊராட்சி மன்ற தலைவரின் கணவரை கைது செய்ய வந்த போலீசாரை தாக்கிய பொதுமக்கள் வெல்டிங் கடைக்கு அழைத்துச் சென்று கை விலங்கை அகற்றிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த துத்திப்பட்டு ஊராட்சி மன்ற தலைவராக உள்ளவர் சுவேதா. இவரின் கணவர் கணேசன் மீது ஏற்கனவே திருட்டு வழக்குகள் உள்ள நிலையில், கடந்த அக்டோபர் மாதம் 11-ஆம் தேதி கோவையில் உள்ள மூதாட்டியை ஏமாற்றி வைர நகைகளை திருடியதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதனிடையே துத்திபட்டு வந்த கோவை குற்றப்பிரிவு போலீசார் கணேசனை துப்பாக்கி முனையில் கைது செய்து கைவிலங்கு போட்டு பூட்டினர்.

ஆனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் போலீசாரை தாக்கியதோடு அவர்களை வெல்டிங் கடைக்கு எடுத்துச்சென்று கை விலங்கை உடைத்தனர். இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே இந்த தாக்குதலில் காயமடைந்த போலீசார், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் குற்றச்சாட்டுக்கு ஆளான கணேசன் தலைமறைவானார். சம்பவ இடத்தில் முகாமிட்ட போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அதேநேரம் கோவையில் கணேசன் திருடியதாக கூறப்படும் சிசிடிவி காட்சிகளும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |