கொலை முயற்சி, கஞ்சா விற்பனை போன்ற வழக்கில் தொடர்புடைய நபரை போலீசார் குண்டர் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
தேனி மாவட்டம் தேவதானபட்டியில் உள்ள தெற்கு தெருவில் தங்கப்பாண்டி என்பவர் வசித்து வருகின்றார். இந்நிலையில் கடந்த மாதம் தங்கபாண்டியை வழிப்பறி மற்றும் திருட்டு வழக்கில் காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இதனையடுத்து தங்கபாண்டி மீது ஏற்கனவே கஞ்சா விற்பனை, கொலை முயற்சி போன்ற 10க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளது.
இதனால் தங்கபாண்டியை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட ஆட்சியர் முரளிதரனுக்கு, சூப்பிரண்டு அதிகாரி பிரவீன் உமேஷ் டோங்கரே பரிந்துரை செய்துள்ளார். அதன் அடிப்படையில் தங்கபாண்டியை குண்டர் சட்டத்தில் கைது செய்ய ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். அந்த உத்தரவின்படி காவல்துறையினர் அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்து மதுரை மத்திய சிறையில் அடைத்துள்ளனர்.