இரண்டு தினங்களாக வீட்டில் திருட முடியாததால் வாசலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரண்டு சக்கர வாகனத்தை கொளுத்தியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
வேலூர் மாவட்டத்தில் உள்ள செங்கோட்டை பகுதியில் வசித்து வருபவர் பிரேம் நவாஸ். இவர் தனது நண்பரின் இரண்டு சக்கர வாகனத்தை தனது வீட்டு வாசலில் நிறுத்திவிட்டு இரவு தூங்கச் சென்றார். இந்நிலையில் திடீரென அக்கம்பக்கத்தினர் அலறல் சத்தம் கேட்டு வெளியில் வந்து பார்த்தபோது நவாஸ் நண்பரது வாகனம் தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்தது.
இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்து தீயை அணைக்க முயற்சித்தார். ஆனால் நெருப்பில் இரண்டு சக்கர வாகனம் முழுவதுமாக எரிந்து சாம்பலானது. இது குறித்து காவல் நிலையத்தில் புகாரளிக்க அதன் அடிப்படையில் காவல்துறையினர் அங்கிருந்த வீடுகளில் பொருத்தப்பட்ட சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர்.
அப்போது பக்கத்துத் தெருவில் வசித்து வரும் அஜித் என்பவர் பெட்ரோலை துணியில் நனைத்து வண்டியை கொளுத்தியது தெரியவந்தது. இதனையடுத்து காவல்துறையினர் அஜித்தை கைது செய்து விசாரிக்க தொடங்கினர். அப்போது கடந்த 5 மற்றும் 6 ஆம் தேதிகளில் நவாஸ் வீட்டில் திருடுவதற்கு அஜித் முயற்சித்ததும் திருட முடியாமல் போனதால் கோபத்தில் வீட்டின் வெளியே நிறுத்தப்பட்டிருந்த இரண்டு சக்கர வாகனத்தை கொளுத்தியதும் தெரியவந்தது