பெங்களூர் நகரில் உள்ள இந்திரா பகுதியில் ஸ்ரீதர் சமந்தா ராய் என்பவர் வசித்து வருகிறார். மென் பொறியாளராக பணியாற்றி வரும் இவர் கடந்த மாதம் தனது மனைவியுடன் வெளிநாடு சென்று இருந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு வீடு திரும்பினார். அப்போது தங்கள் கையில் வைத்திருந்த சாவியை கொண்டு கதவை திறக்க முயற்சி செய்தனர். அதனால் கதவு திறக்காததால் சாவி செய்யும் கடையை அணுகி வேறு சாவியை செய்ய சொல்லி அதை வைத்து கதவை திறந்தனர்.
அதன் பிறகு உள்ளே சென்று பார்த்த போது பின்பக்க கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர்கள் பீரோவை திறந்து பார்த்தனர். அப்போது அதில் பல லட்சம் மதிப்புடைய நகைகள் மற்றும் பணம் திருடு போயிருப்பது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் உடனே காவல்துறைக்கு தகவல் அளித்த நிலையில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது எதர்ச்சியாக பூஜை அறையைத் திறந்து பார்க்கையில் அங்கு தூக்கில் தொங்கிய நிலையில் ஒருவர் கிடந்துள்ளார்.
அவருக்கு அருகில் பணம் மூட்டை மற்றும் வீட்டை உடைக்க கொண்டு வந்த ஆயுதங்கள் அனைத்தும் இருந்தது. இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த காவல்துறையினர் உடனே சதுரத்தை மீட்டு உடற்கூறாய்வுக்கு அனுப்பி வைத்தனர். அதன் பிறகு மேற்கொண்ட விசாரணையில் அசாம் மாநிலத்தைச் சேர்ந்த திலீப் பாதுகர் என்பவர் கடந்த சில வருடங்களாக பெங்களூருவில் வசித்து வந்ததும் அங்கு கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டு வந்ததும் கண்டறியப்பட்டது. இதன் மூலமாக வீட்டில் கொள்ளை அடிக்க வந்தது அவர்தான் என காவல்துறையினர் உறுதி செய்தனர். இருந்தாலும் திருட வந்த இடத்தில் தற்கொலை செய்து கொள்ள என்ன காரணம் என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.