கடலூர் வண்ணாரப்பேட்டை பாளையத்தில் 47 வயதான அரசு ஊழியர் வசித்து வருகிறார். இவருக்கு மகனும், மகளும் உள்ளனர். இவரும், 19 வயதுடைய கல்லூரி செல்லும் மகளும் நேற்று முன்தினம் இரவு வீட்டில் பின்பக்க கதவை மூடாமல் வராண்டாவில் தூங்கி உள்ளனர். அவரது மூத்த மகன் வீட்டில் உள்ள ஒரு அறையில் தூங்கிக் கொண்டிருந்தார். இந்நிலையில் நள்ளிரவு நேரத்தில் அரசு ஊழியர் வீட்டில் பின் பக்க கதவை திறந்து உள்ளே வந்த 15 வயதுடைய சிறுவன் நகைகள் மற்றும் பணம் எது இருக்கிறதா என்று வீடு முழுவதும் தேடியதாக கூறப்படுகிறது. இதில் நகை, பணம் இல்லாததால் அந்த சிறுவர் வீட்டில் இருந்து வெளியே செல்ல முயன்று உள்ளார். அப்போது வரண்டாவில் தூங்கிக் கொண்டிருந்த கல்லூரி மாணவியின் மீது சிறுவனின் பார்வை திரும்பியது. உடனே அந்த சிறுவன் மாணவியின் வாயை பொத்தி அவரை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றுள்ளான்.
அப்போது மாணவியின் சத்தம் கேட்டு எழுந்த அரசு ஊழியர் அந்த சிறுவனை பிடிக்க முயன்ற போது அவன் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டான். மேலும் அவனுடன் வீட்டில் அருகில் நின்று கொண்டிருந்த மேலும் 2 சிறுவர்கள் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர். உடனே இது குறித்து அரசு ஊழியர் கொடுத்த புகாரின் பேரில் தேனாம்பட்டினம் போலீசார் வழக்கு பதிவு செய்து 3 சிறுவர்களை தேடி வந்தனர். இதற்கிடையில் நேற்று மதியம் தேவனாம்பட்டினம் முனீஸ்வரர் கோவில் அருகில் சந்தேகத்திற்கிடமான வகையில் நின்று கொண்டிருந்த சிறுவனை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். அந்த விசாரணையின் போது அவன் தேனாம்பேட்டினம் சுனாமி நகரை சேர்ந்த சிறுவன் என்பது, அரசு ஊழியர் வீட்டில் புகுந்த திருடன் முயற்சி செய்ததும், அவரது மகளை பாலியல் தொல்லை கொடுத்ததும் தெரியவந்தது. இதனையடுத்து அந்த சிறுவனை கைது செய்து சிறுவர் சீர்திருத்த பள்ளியில் ஒப்படைத்தனர். மேலும் தலைமறைமாக உள்ள 2 சிறுவர்களை தேடி வருகின்றனர்.