திருத்தணியில் தந்தை, மகன் உட்பட மூன்று பேருக்கு அறிவாள் வெட்டு விழுந்த நிலையில் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டார்கள்.
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள திருத்தணி ஒன்றியம் பட்டாபிராமப்புரம் அருகே வசித்து வருபவர் கனகராஜ். இவர் நேற்று மாலை மாமண்டூர் பகுதியில் இருக்கும் மது கடையில் மதுவாக சென்றுள்ளார். அப்பொழுது தினேஷ் என்பவருக்கும் மற்றொரு நபருக்கும் வாய் தகராறு ஏற்பட்டு ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டுள்ளனர். இதனால் கனகராஜ் அதில் தலையிட்டு இரு தரப்பினரையும் தடுத்து நிறுத்தியுள்ளார்.
பின் கனகராஜ் வீட்டுக்கு திரும்பி நிலையில் கனகராஜ் மீது கோபத்தில் இருந்த தினேஷ் மற்றும் அவரின் நண்பர்கள் இரண்டு பேர் மோட்டார் சைக்கிளில் கனகராஜின் வீட்டிற்கு வந்து அறிவாளால் வெட்டியுள்ளனர். இதில் கனகராஜ் படுகாயம் அடைந்தார். கனகராஜை தாக்குவதை பார்த்த அவரின் மகன் குணா மற்றும் உறவினர் சரஸ்வதி தடுக்க முயன்றுள்ளனர். ஆனால் அவர்கள் குணா மற்றும் சரஸ்வதியையும் சரமாரியாக வெட்டியுள்ளனர். இதையடுத்து அங்கே இருந்து தப்பி சென்று விட்டார்கள்.
பின் உறவினர்கள் படுகாயம் அடைந்த மூவரையும் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தார்கள். இந்நிலையில் குற்றவாளிகளை கைது செய்யக் கோரி அவரின் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டார்கள். இதை தொடர்ந்து தகவல் அறிந்து வந்த போலீசார் குற்றவாளிகளை விரைவில் கைது செய்வோம் என கூறியதை தொடர்ந்து மறியலை கைவிட்டார்கள்.