Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

“திருத்தணியில் புதிய பள்ளி கட்டிடம் அமைக்க வேண்டும்”… கோரிக்கை விடுத்த பொதுமக்கள்…!!!!!!

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள திருத்தணி காந்திரோடு பகுதியில் 60 வருடங்களும் மேலாக பழமை வாய்ந்த அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் தற்போது 1300 -க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். பழமை வாய்ந்த இந்த பள்ளி கட்டிடம் கடந்த சில நாட்களுக்கு முன்பாக பெய்த தொடர் மழையின் காரணமாக சுவர்கள் எல்லாம் சேதமடைந்து இடிந்து விழுகின்ற நிலையில் இருந்தது.

இந்நிலையில் “வழக்கம்போல் பள்ளியில் அரையாண்டு தேர்வு நடைபெற்று வந்தது. இதனையடுத்து மதியம் 3 மணியளவில் மாணவர்கள் தேர்வு எழுதிக் கொண்டிருந்தபோது திடீரென பள்ளியின் மேல் பகுதியில் உள்ள சுவர் சரிந்து விழுந்தது. இதில் மாணவர்கள் தேர்வு எழுதிக் கொண்டிருந்ததால் பெரிய விபத்து எதுவும் ஏற்படவில்லை. அதனால் மாவட்ட நிர்வாகம் தலையிட்டு பள்ளி கட்டிடத்தை அகற்றி புதிய கட்டிடம் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து” வருகின்றனர்.

Categories

Tech |