Categories
மாநில செய்திகள்

திருத்தணி செல்லும் பக்தர்களுக்கு…. வெளியான ஷாக் நியூஸ்….!!!

திருவள்ளுவர் மாவட்டம் திருத்தணி அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் வருகின்ற 31ம் தேதி அன்று திருப்படி விழா மற்றும் ஜனவரி 1 ஆம் தேதி ஆங்கில புத்தாண்டு விழா ஏற்பாடுகள் குறித்து கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. திருத்தணி வருவாய் கோட்டாட்சியர் சத்தியா மற்றும் திருத்தணி சுப்பிரமணியசுவாமி கோயில் இணை ஆணையர் பரஞ்சோதி ஆகியோர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர். இதில் ஒமைக்ரான் வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.

அதன்படி டிசம்பர் 31ஆம் தேதி காலையில் வழக்கம்போல் திருப்படி திருவிழா சரவண பொய்கை திருகோணமலையில் முதல் படிக்கு சிறப்பு பூஜைகளுடன் தொடங்கும். அன்று காலை 11 மணிக்கு மலை கோவில் மாட வீதியில் உற்சவர் தங்கத்தேர் பவனி நடைபெறும். அதனை தொடர்ந்து ஜனவரி 1 ஆம் தேதி நள்ளிரவு 12 மணிக்கு ஆங்கிலப் புத்தாண்டு பிறக்கும் போது சுவாமி தரிசனம் செய்ய ஏராளமான பக்தர்கள் மலைக்கோயிலில் கூடுவார்கள் என்பதால் நள்ளிரவு பூஜைகளுக்கும் மட்டும் தடை விதிக்கப்பட்டுள்ளது. அதன்பிறகு ஜனவரி 1-ஆம் தேதி அதிகாலை திருக்கோவில் திறக்கப்பட்டு இரவு 10 மணி வரை பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |