திருத்தணி முருகன் கோவிலுக்கு தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றன. இங்கு அபிஷேகம் மற்றும் சேவா டிக்கெட்டுகள் 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரை ஆன்லைன் மூலமாக விநியோகம் செய்யப்பட்ட நிலையில் கொரோனா காரணமாக அனைத்து சேவைகளும் கடந்த ஆண்டு வரை ரத்து செய்யப்பட்டது. அதன் பிறகு கடந்த ஜனவரி மாதம் முதல் மீண்டும் அபிஷேகம் மற்றும் சேவா டிக்கெட் பக்தர்களுக்கு மலைக்கோவிலில் நேரில் வருபவர்களுக்கு மட்டும் வழங்கப்பட்டு வருகின்றது.
இதன் காரணமாக பக்தர்கள் தங்களின் வேண்டுதல் நிறைவேறுவதற்காக இரண்டு முறை திருத்தணி மலைக்கோவிலுக்கு வந்து செல்ல வேண்டி உள்ளது. இந்நிலையில் நேற்று முதல் மீண்டும் ஆன்லைன் மூலமாக அபிஷேகம் மற்றும் சேவா டிக்கெட்டுகள் வழங்கப்படுகின்றன. பக்தர்கள் https://tiruttanigaimurugan,hrce.gov.in என்ற இணையதளம் மூலமாக மேற்கண்ட டிக்கெட் பெற்றுக் கொள்ளலாம் என கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. அதேசமயம் தேர் வீதிகளில் நான்கு இடங்களில் க்யூ ஆர் கோடு விளம்பர பலகைகள் வைக்கப்பட்டுள்ளதால் இனி பக்தர்கள் பணமாக இல்லாமல் மொபைல் போன் மூலமாக கியூ ஆர் கோடு ஸ்கேன் செய்து காணிக்கைகள் மற்றும் நன்கொடைகள் செலுத்தலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.