திருத்தணியில் நடைபெறும் ஆடிக்கிருத்திகை தெப்பத் திருவிழா இன்று முதல் ஆன்லைன் மூலம் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படும் என்று கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. இதுகுறித்து கோயில் நிர்வாகம் சார்பாக கூறுகையில் “ ஞானபண்டிதன் முருகனின் அறுபடை வீடுகளில் ஐந்தாம்படைத் திருத்தலமான , திருத்தணிகை மலை அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலின், வருடாந்திர உற்சவமான. ‘ஆடிக்கிருத்திகை ‘தெப்பத்திருவிழாவை’ ஆன்லைன் மூலம் ஆன்மிக அன்பர்களுக்கு நேரலையாக ஒளிபரப்ப இருக்கிறோம்.
பக்தர்கள் https://youtu.be/zCWfy8sfXmk எனும் YouTube அலைவரிசை மூலம் ஆகஸ்ட் 12, 13, மற்றும் 14 -ஆம் தேதி, மாலை 5.00 மணி முதல் திருத்தணி உற்சவமூர்த்தி கந்தக் கடவுளின், அபிஷேக, அலங்கார, ஆராதனைகளையும், அதனைத் தொடர்ந்து, ‘தெப்பத் திருவிழா ‘ எனும் அற்புத உற்சவத்தையும், துல்லியமான நேரலை ஒளிபரப்பு மூலம் தங்கு தடையின்றி, கண்டு மகிழ்ந்து அருள்மிகு சுப்பிரமணிய சுவாமியின் பேரருள் பெறலாம்” என்று தெரிவித்துள்ளது.