திருத்துறையூரில் பழங்கால பெருமாள் கற்சிலை கண்டெடுக்கப்பட்டுள்ளது.
கடலூர் மாவட்டத்தில் உள்ள திருத்துறையூர் ஊராட்சியில் புதிதாக கிராம நிர்வாக அலுவலகம் கட்ட முடிவு செய்தனர். இதற்காக நேற்று முன்தினம் காலை பொக்லைன் எந்திரம் மூலம் பள்ளம் தோண்டும் பணி நடைபெற்ற போது நான்கு அடி உயரமுள்ள பழங்கால கற்சிலை ஒன்று கண்டெடுக்கப்பட்டது. இந்நிலையில் பழங்கால பெருமாள் சிலையை பொதுமக்கள் அபிஷேகம் செய்தும், தீபம் ஏற்றியும் வழிபட்டனர்.
இதுகுறித்து அறிந்த வருவாய் துறையினர் நேரில் சென்று சிலையை எடுத்து செல்ல முயன்றதற்கு கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அப்போது எங்கள் ஊரில் கண்டெடுக்கப்பட்ட சிலைக்கு கோவில் கட்டி வழிபாடு நடத்த முடிவு செய்துள்ளோம் என கிராம மக்கள் கூறியுள்ளனர். அந்த சிலை தற்போது பாதுகாப்பான இடத்தில் வைக்கப்பட்டுள்ளது.