கடந்த சனிக்கிழமை இரவு திரிபுராவில் 4 திருநங்கைகள் ஹோட்டல் விருந்து ஒன்றை முடித்துவிட்டு வீடு திரும்பியுள்ளனர். அப்போது அந்த வழியாக வந்த போலீசார் அவர்களை இடைமறித்து பணம் பறித்ததாக கூறி விசாரணை நடத்துவதற்காக அகர்தலா காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கே ஆண் மற்றும் பெண் போலீசார் சேர்ந்து அவர்களின் பாலினத்தை அறிவதற்காக திருநங்கைகளின் ஆடைகளைக் களையச் சொல்லி சோதனை செய்ததாக கூறப்படுகிறது.
மேலும் கிராஸ் டிரஸ் அணிய மாட்டோம் எனவும் மீறி அணிந்தால் எங்களை போலீசார் கைது செய்து கொள்ளலாம் எனவும் எழுதிக்கொடுத்து கையொப்பம் வாங்கியதாகவும் கூறப்படுகிறது. இதனையடுத்து திருநங்கைகள் காவல் நிலையத்தில் அவமானப்படுத்தப்பட்ட தாக கூறி பல்வேறு தரப்பினரும் போலீசார் மீது தங்கள் கண்டனங்களை தெரிவித்துள்ளனர்.