திருநங்கைகளுக்கான காப்பீடு திட்டம் தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.
மத்திய அரசாங்கம் திருநங்கைகளின் நலனுக்காக ஆயுஷ்மான் பாரத் டிஜி என்னும் சுகாதார காப்பீட்டை அறிமுகம் செய்துள்ளது. இந்த காப்பீடு திட்டத்திற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் தற்போது கையெழுத்து ஆகியுள்ளது. இந்த காப்பீட்டு திட்டத்தின் படி திருநங்கைகளுக்கு வருடத்திற்கு ரூபாய் 5 லட்சம் வரை மருத்துவ காப்பீடு வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
இந்த மருத்துவ காப்பீட்டில் இணைந்து பயன்பெற விரும்பும் திருநங்கைகள் அரசின் சான்றிதழ்களை கண்டிப்பாக வைத்திருக்க வேண்டும். இந்தத் திட்டம் அடுத்த மாதம் முதல் நடைமுறைக்கு வரும் என்று கூறப்பட்டுள்ளது.