திருநங்கைகளுக்கு சிறைகளில் தனிஅறை வழங்குவது தொடர்பாக மத்திய அமைச்சகம் மாநில அரசுகளுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.
சிறைச்சாலைகளில் திருநங்கைகளுகளுக்கென அமைக்கப்படும் அறைகள் மூலம் அவர்கள் முழுவதுமாக தனிமைப்படுத்தப்படக் கூடாது எனவும், அவர்களின் அடிப்படை உரிமைகளை உறுதி செய்வதற்காகவே தனி அறைகள் மற்றும் இதர வசதிகள் ஏற்படுத்தித் தருவதாகவும் அரசு தெரிவித்துள்ளது .அவர்களுக்கென தங்கும் அறை, கழிப்பறை மற்றும் குளியலறை ஆகியவற்றை உறுதிப்படுத்த மாநில அரசுகளைக் மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது.
மேலும் உள்துறை அமைச்சகம் சிறைச்சாலைகளில் அவர்கள் சேர்க்கை. மருத்துவப் பரிசோதனை, வசிப்பிடம், உடை உள்ளிட்ட அனைத்து வகைகளிலும் கண்ணியத்துடன் நடத்தப்பட வேண்டும் என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளது. மேலும் பாலின அடிப்படையில் யாரையும் இழிவு படுத்த கூடாது எனவும் அரசு கூறியுள்ளது.