Categories
மாநில செய்திகள்

திருநங்கைகளுக்கு நாளை ஸ்மார்ட் குடும்ப அட்டை…. வெளியான மிக முக்கிய அறிவிப்பு…..!!!

விழுப்புரத்தில் வசித்து வரும் திருநங்கைகள் ஸ்மார்ட் குடும்ப அட்டைகள் பெறும் வகையில் நாளை அம்மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களிலும் சிறப்பு முகாம் நடைபெற இருக்கிறது என்று மாவட்ட கலெக்டர் த.மோகன் அறிவித்துள்ளார். இது தொடர்பாக மாவட்ட ஆட்சித் தலைவர் கூறியபோது, சமூகத்தில் மிகவும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் உள்ள திருநங்கைகளுக்கு ஸ்மார்ட் குடும்ப அட்டைகள் வழங்கி, அவர்களது உணவு பாதுகாப்பை உறுதி செய்ய தமிழ்நாடு மாநில உணவு ஆணையம் தொடர்ந்து நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது.

மேலும் மாநில உணவு ஆணையத்தால் 21/12/2021 அன்று விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடத்தப்பட்ட 7 மாவட்டங்களுக்கான பிராந்திய அளவிலான ஆய்வுக் கூட்டத்தில், அதிக எண்ணிக்கையிலான திருநங்கைகளுக்கு ஸ்மார்ட் குடும்ப அட்டைகள் வழங்கப் படாமல் இருப்பது தெரியவந்துள்ளது என்று தெரிவித்துள்ளார். ஆகவே விழுப்புரத்தில் உள்ள அனைத்து திருநங்கைகளுக்கும் ஸ்மார்ட் குடும்ப அட்டைகள் விரைவில் வழங்க ஏதுவாக நாளை அம்மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களிலும் சிறப்பு முகாம் நடத்தப்பட இருக்கிறது.

இந்த முகாமில் ஸ்மார்ட் குடும்ப அட்டை பெறாத திருநங்கைகளுக்கு இணையம் மூலமாக ஸ்மார்ட் குடும்ப அட்டை விண்ணப்பிக்க 18 வயது பூர்த்தியடைந்த திருநங்கைகள் ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை முகவரிக்கான ஆதாரம் இவற்றுடன் புகைப்படம் மற்றும் கைபேசி எண்ணுடன் சம்பந்தப்பட்ட வட்டாட்சியர் அலுவலகங்களில் நடைபெறும் சிறப்பு முகாமில் பெயர் நீக்கம் செய்யவும், புதிய ஸ்மார்ட் குடும்ப அட்டை விண்ணப்பித்தும் பயனடையுமாறு கலெக்டர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |