தேசிய திருநங்கைகள் தினத்தை முன்னிட்டு முதல்வர் முக ஸ்டாலின் திருநங்கைகளுக்கு தேநீர் விருந்து அளித்துள்ளார். திருநங்கைகள் நல வாரிய உறுப்பினர் முனைவர் ரியா தோழி அமைப்பின் நிர்வாகி சுதா, கேத்ரினா இயன்முறை மருத்துவர்கள் செல்வி சந்தோஷம் மற்றும் மோனிகா போன்று சென்னை முகாம் அலுவலகத்தில் முதல்வர் முக ஸ்டாலின் சந்தித்து வாழ்த்து பெற்றனர். அப்போது முதல்வர் திருநங்கைகளுக்கு தேனீர் விருந்து அளித்தார்.
இந்த நிகழ்வின்போது இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு உடன் இருந்துள்ளார். இதுபற்றி முதல்வர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது, இன்று என்னை சந்தித்த சகோதரியா ரியா உள்ளிட்ட திருநங்கை சகோதரிகளுக்கு திருநங்கையர் நாள் வாழ்த்துக்களை தெரிவித்து இருக்கிறேன். திருநங்கையர் கண்ணியம் காத்த முத்தமிழ் அறிஞர் கலைஞர் காட்டிய சமூக நீதிப் பாதையில் நடைபோடும் நமது அரசு திருநங்கைகள் – திருநம்பிகள் உரிமைக்காக தொடர்ந்து உழைக்கும் என பதிவிட்டிருக்கிறார்.