திருநங்கைகள் போல வேடம் அணிந்து இளம் பெண்களிடம் கொள்ளையடித்த மூன்று நபர்களை மும்பை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்கள் பெண்கள் போல் ஆடை அணிந்து ஒரு பெண்ணை பயமுறுத்தி அவரிடம் இருந்து குழந்தைக்கு உடல் நல கோளாறு ஏற்பட்டு இருக்கிறது எனக் கூறி அந்த பெண்ணை மிரட்டி அவரிடம் இருந்து நகைகளை பறித்துள்ளார். மேலும் அந்தப் பெண்ணிடம் அவருடைய குழந்தைக்கு உடல்நலம் பெற வேண்டும் என்றால் சில பூஜைகள் மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார். அதன்படி அந்த பெண்ணிடம் இருந்த தங்க நகைகள் அனைத்தையும் மஞ்சள் பொதிந்த காகிதத்தில் மடித்து வைக்குமாறு அறிவுறுத்தியுள்ளார். இவ்வாறு செய்தால் அந்த குழந்தைக்கு தீங்கு எதுவும் பரவாது என தெரிவித்துள்ளார். பயத்தில் இருந்த அந்த பெண்ணும் அவர்கள் தெரிவித்தபடி செய்துள்ளார். அதன் பின் அவர்கள் அந்த காகித மூட்டை எடுத்துக்கொண்டு அங்கிருந்து தப்பியோடு விட்டனர். இந்த விவகாரத்தை அறிந்த அந்த பெண்ணின் கணவர் போலீசில் புகார் கொடுத்து இருக்கின்றார்.
அதன்பின் போலீசார் வழக்கு பதிவு செய்து அவர்களை தேடி வருகின்றார்கள். அந்த மூவரும் மும்பையில் இருந்து 500 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள புல்தானா பகுதியில் இருப்பது தெரியவந்துள்ளது. இந்நிலையில் அவர்களை கைது செய்த போலீச விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் அந்த பெண்ணிற்கு குழந்தை பிறந்துள்ள விவரம் மற்றும் வீட்டின் முகவரி போன்றவற்றை மருத்துவமனை மூலமாக அவர்கள் அறிந்து கொண்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. விசாரணை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.