Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

திருநங்கையாக மாறிய லோகேஷ்…. படிப்பை தொடர மனு…. கலெக்டர் அதிரடி நடவடிக்கை….!!!!

திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றத்தை சேர்ந்த லோகேஷ் சென்ற 2018-2019 ஆம் ஆண்டு பொன்னேரியிலுள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் எலக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன் பாடபிரிவில் படித்தார். அப்போது முதல் ஆண்டு படிக்கும்போது லோகேஷ் திருநங்கையாக மாறியதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக 2 ஆம் ஆண்டு படிப்பதற்கு கல்லூரி நிர்வாகம் அனுமதி மறுத்ததாக தெரிகிறது. இதையடுத்து கடந்த 2020-ம் வருடம் முதல் 2022-ம் ஆண்டுவரை லோகேஷ் கொரோனா காரணமாக கல்லூரி படிப்பை படிக்க முடியாத நிலை ஏற்பட்டது. அதன்பின் 2022-2023 பட்டப் படிப்பு படிக்க ஆசைப்பட்ட லோகேஷ் திருநங்கையாக மாறியதால் தன் பெயரை ஓவியா என பெயர் மாற்றம் செய்துகொண்டு பச்சையப்பன் கல்லூரி மற்றும் மாநில கல்லூரியில் சேர விண்ணப்பித்தார்.

எனினும் திருநங்கைக்களுக்கான இட ஒதுக்கீட்டில் சேர நிர்ணயம் செய்த வயதை விட 5 நாட்கள் அதிகமாக இருந்ததால் சேர்க்கைக்கான வயது இல்லை எனக்கூறி நிராகரித்ததாக கூறப்படுகிறது. அதனை தொடர்ந்து அவர் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆல்பிஜான் வர்கீசை நேரில் சந்தித்து இது சம்பந்தமாக கோரிக்கை மனு அளித்தார். அந்த மனுவை பரிசீலனைசெய்த கலெக்டர் தமிழக அரசின் உயர்கல்வித்துறையின் ஒப்புதலுடன் திருநங்கை ஓவியாவுக்கு கருணை அடிப்படையில் பட்டப்படிப்பு படிக்க ஏற்பாடு செய்தார். அதனடிப்படையில் அவருக்கு திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியிலலுள்ள உலகநாத நாராயணசாமி அரசினர் கல்லூரியில் பி.எஸ்.சி கணிதவியல் படிக்க இடஒதுக்கீடு செய்யப்பட்டது. அதன்பின் அந்த கல்லூரியில் சேருவதற்கான ஆணையை மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆல்பிஜான் வர்கீஸ் ஓவியாவிடம் வழங்கினார்.

Categories

Tech |