Categories
அரசியல்

திருநங்கையை களமிறக்கிய கமலஹாசன்…. மீனாட்சியம்மன் வேடத்தில் வாக்கு சேகரிப்பு…!!!

மக்கள் நீதி மய்யம் கட்சியின் சார்பாக மதுரை மாநகராட்சி தேர்தலில் பாரதி கண்ணம்மா என்ற திருநங்கையை களமிறங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மதுரை மாநகராட்சிக்கான தேர்தல் வரும் 19ம் தேதி நடக்கிறது. தி.மு.க, அ.தி.மு.க, காங்கிரஸ், பா.ஜ.க, தே.மு.தி.க, நாம் தமிழர், அ.ம.மு.க, மக்கள் நீதி மய்யம், மார்க்சிஸ்ட் போன்ற கட்சிகள் அதிக ஆர்வத்துடன் இறங்கியிருக்கிறது. முதல் தடவையாக மதுரை மாநகராட்சி தேர்தலில் திருநங்கைகள் 2 பேர் தீவிரமாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டிருக்கிறார்கள்.

பாரதிகண்ணம்மா என்ற திருநங்கை லட்சுமிபுரம் 86வது வார்டில் களமிறங்க வேட்புமனு தாக்கல் செய்திருக்கிறார். வேட்புமனு தாக்கலுக்கு வந்த அவர், மீனாட்சி அம்மனின் வேடமணிந்து வேட்புமனு தாக்கல் செய்திருக்கிறார். பெண்களுக்கென்று ஒதுக்கப்பட்ட வார்டில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் சார்பாக பாரதிகண்ணம்மா களமிறங்கியிருக்கிறார். அவர் இன்று காலையிலிருந்து ஒவ்வொரு வீட்டிற்கும் கடைகளுக்கும் சென்று வாக்கு சேகரித்தார்.

Categories

Tech |