Categories
தேசிய செய்திகள்

திருநங்கை நடிகையும், மாடல் அழகியுமான….. செரீன் செலியின் மாத்யூ தற்கொலை….. நடந்தது என்ன?…. அதிர்ச்சி தகவல்….!!!!

கொச்சியில் அடுக்குமாடி குடியிருப்பில்  கேரள நடிகையும், மாடலுமான செரீன் செலியின் மாத்யூ இறந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டார். திருநங்கையான இவர் ஆலப்புழையைச் சேர்ந்தவர். பல நாட்களாக இந்த குடியிருப்பில் பல திருநங்கைகள் உடன் சேர்ந்து வசித்து வருகிறார். நேற்று முதல் இவரை காணாததால் அவரது வீட்டின் கதவை திறந்து பார்த்தபோது அவர் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்தார். இதையடுத்து அவர் வீடியோ அழைப்பு செய்தபடி தூக்கில் தொங்கியது தெரியவந்துள்ளது. ஆனால் அவர் யாருக்கு வீடியோ அழைப்பு செய்தார் என்பது தொடர்பான விவரம் வெளியிடப்படவில்லை.

அவர் அங்கு பயன்படுத்தப்பட்ட மாத்திரைகள் கிடைத்தது. மேலும் கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் மனக் கஷ்டத்தில் இருப்பதாக சமூகவலைதளங்களில் பதிவிட்டிருந்தார். இவருக்கும் இவரது நண்பருக்கும் இடையில் கருத்து வேறுபாடு இருந்தது என்று சக திருநங்கைகள் தெரிவித்துள்ளனர். சில நாட்களுக்கு முன்பு மாடலும் நடிகையுமான சஹானா கோழிக்கோட்டில் அவரது வீட்டில் மர்மமான முறையில் மரணமடைந்தார். அவர் தற்கொலை செய்து கொண்டார் என்று கணவர் தரப்பில் தெரிவிக்கப்பட்டாலும் அதை காவல்துறையினர் சந்தேகத்தின் அடிப்படையில் உள்ள மரணமாகவே கருதி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |