நெற்றியில், திருநீறு, சந்தனம், குங்குமம் அணிவது ஏன்.? இதில் மறைந்துள்ள அறிவியலின் அதிசயத்தை தெரிந்து கொள்ளுங்கள்.
அறுகம்புல்லை உண்ணுகின்ற பசுமாட்டின் சாணத்தை எடுத்து உருண்டையாக்கி வெயிலில் காயவைக்க வேண்டும். பின் இதனை உமியினால் மூடி புடம் போட்டு எடுக்க வேண்டும். இப்போது இந்த உருண்டைகள் வெந்து நீறாகி இருக்கும். இதுவே உண்மையான திருநீறாகும். இது நல்ல அதிர்வுகளை மட்டும் உள்வாங்கும் திறன் கொண்டது.
நம்மைச் சுற்றி அதிர்வுகள் இருக்கின்றன என்பது யாவரும் அறிந்ததே இல்லை. நம்மை அறியாமலே அதிர்வுகளின் மத்தியில்த் தான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். நமது உடலானது இவற்றை ஏற்றுக் கொள்கிறது.
திருநீறு:
திருநீறானது நல்ல அதிர்வுகளை ஏற்றுக் கொள்ளும் தன்மை வாய்ந்தது. அந்தவகையில் உடலின் முக்கிய பாகங்களில் திருநீறு இட்டுக் கொள்ளும் வழக்கம் இந்து சமயத்தை சார்ந்தவர்களிடம் காணப்படுகின்றது. இதைவிட மனித உடலில் நெற்றி பகுதியில் மிக முக்கியமாக கருதப்படுகிறது. நெற்றியிலேயே வெப்பம் அதிகமாகவும் வெளிப்படுகிறது, உள் இழுக்வும்படுகின்றது.
சூரியக்கதிர்களின் சக்தியை இழுத்து சரியான முறையில் உள்ளனுப்பும் அற்புதமான வேலையை திருநீறு செய்யும் என்பதாலேயே இதனை நெற்றியில் இடுவார்கள். தன்னுடைய உடலில் சாம்பல் சத்துக் குறைந்துவிட்டால், இந்தியா போன்ற வெப்பமான நாடுகளில் வளரக்கூடிய கோழி இனங்கள் சாம்பலிலே விழுந்து குளிப்பதைக் கண்டிருப்பீர்கள்.
அதேபோல்தான் மனிதனும் தன்னுடைய மூட்டுவலி தோற்றுவிக்கும் இடங்களில் தண்ணீரை உறிஞ்சக்கூடிய திருநீற்றை அணிகிறார்கள். பசுமாட்டுச்சாணத்தை எரித்து திருநீறு செய்கின்றார்கள். மாடு அறுகம்புல் போன்ற பலவகையான புல்வகைகளை உண்டு தனது உடலைத் தேற்றிச் சாணம் போடும். அதை நெற்றியில் இடும் பொழுது ஏற்படும் இரசாயண மாற்றங்கள் உடலுக்கு மருத்துவத்தன்மையைக் கொடுக்கின்றது.
இரண்டு புருவங்களுக்கும் மத்தியில் மிக நுண்ணிய நரம்பு அதிர்வலைகளை அளிக்கின்றது. அதனால்தான் அந்த இடத்தைப் பயன்படுத்தி மனவசியம் இலகுவாகச் செய்யமுடியும். அதனாலேயே மனவசியத்தைத் தடுக்க அந்த இடத்தில் திருநீறு, சந்தனம் போன்றவை இடப்படுகின்றன.
சந்தனம்:
சந்தனம் நெற்றியில் வெளியிடப்படும் வெப்பத்தை நீக்குகின்றது. நெற்றியின் இரு புருவங்களுக்கும் இடையிலுள்ள நெற்றிப் பொட்டிலே பட்டும்படாமலும் சுண்டுவிரலை நேராகப்பிடித்தால் மனதில் ஒருவகை உணர்வு தோன்றும். அந்த உணர்வோடு நிலையிலே தியானம் செய்தால் மன ஒருமைப்பாடு தோன்றும். சிந்தனை தெளிவுபெறும். எதையும் தெளிவாகப் புரிந்து கொள்ளும் நிலை தோன்றும். நெற்றிப் பொட்டு குளிர்ச்சியுடன் இருக்கும்.
குங்குமம்:
அதற்கு சரியான மருந்து சந்தனம், குங்குமம் என்பது, மஞ்சள் படிகாரம் சுண்ணாம்பு இவற்றைக் கலந்து குங்குமம் தயார் செய்யப்படுகின்றது. இவை மூன்றுமே கிருமிநாசினி பொருட்களாகும். மனித உடலில் தெய்வ சக்தி வாய்ந்தது நெற்றிக்கண் அதாவது இரண்டு புருவங்களுக்கு நடுவிலுள்ள பகுதியில் குங்குமத்தை வைத்தால் அமைதி கிடைக்கும். ஹிப்னாடிசம் உள்பட எந்த சக்தியையும் முறியடிக்கும் சக்தி குங்குமத்திற்கு உண்டு.
நம் கபாலத்தில் உள்ள சிந்தனை நரம்புகளில் பித்து இரு புருவங்களுக்கு இடையில் உள்ளது. மனிதன் அதிகமாக சிந்திக்கும் போது சிந்தனை நரம்புகள் சூடேறி நெற்றி வலி, தலைபாரம், தலைச்சுற்றல் ஏற்படும். மன உளைச்சல் ஏற்பட்டுத் தன் நிலை மறக்க வேண்டிய சூழ்நிலை உருவாகி, பல விரும்பத் தாகத விளைவுகள் ஏற்படுத்தும்.
எனவே அந்த நரம்பு மண்டலம் குளிர்ச்சியாக இருக்க வேண்டும். அதற்கு சந்தனம், திருநீறு, குங்குமம் இவைகளுக்கு குளிர்ச்சியூட்டும் தன்மை உண்டு. எனவே அந்த நரம்பு மண்டலம் குளிர்ச்சியாக இருக்க வேண்டும் என்பதற்காக சந்தனம் பூசி, காயாமல் இருக்க குங்குமம் இடுகிறோம். இவற்றைப் பூசுவதால் புத்துணர்வும் புதுத் தெளிவும், புதிய சிந்தனைகளும், உற்சாகமும் தோன்றும், உணர்ச்சியற்ற நரம்புகள் தூண்டப்படுகின்றன.
மனிதனின் உடலுக்கு உகந்த முறைகளைத்தான் நாம் இறைவழிபாடுகள் மூலம் அடைகிறோம்