Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

திருநீற்றுப்பச்சிலை சாறு போதும்….”இத்தனை நோய்கள் குணமாகும்”… இத்தனை நாளா இது தெரியாம போச்சே..!!

திருநீறு பச்சிலை சாரை எதற்கெல்லாம் பயன்படுத்தலாம் என்பது குறித்து இந்த தொகுப்பில் நாம் பார்க்க போகிறோம்.

திருநீறு பச்சிலை என்பது ஒரு ஆயுர்வேத மூலிகை. இது ஆயுர்வேத மருந்துகளுக்கு முக்கியப் பொருளாக உள்ளது. இதனை கொண்டு பல நோய்களை நம்மால் குணப்படுத்த முடியும். கிராமப்புறங்களில் அதிகம் இந்த மூலிகை வளர்ந்து இருக்கும். திருநீறு பச்சிலையை முகரும் போது தலைவலி, நடுக்கம், தூக்கமின்மை ஆகியவை குணமாகும்.

இந்த இலையை அரைத்து, இலைச் சாற்றுடன் தேன் கலந்து சாப்பிட்டால் மார்பு வலி, இருமல், வாய்வு பிரச்சனை சரியாகும். 10 மில்லி திருநீற்றுப்பச்சிலை சாறு எடுத்து தேனில் கலந்து சாப்பிட்டு வர குடல் பலமடையும். தேள் கடியால் அவதிப்படுபவர்கள் இதன் இலையை கசக்கி பூசினால் வலி குறையும். காது வலி, காதில் சீழ் வடிதல் போன்ற பிரச்சினை உள்ளவர்கள் இந்த இலையின் சொட்டுகளை உங்கள் காதில் விட்டால் உடனே நிவாரணம் கிடைக்கும். முகப்பருவை விரட்ட திருநீறு இலையுடன் வசம்பு சேர்த்து அரைத்து பூசினால் நல்ல பலன் கிடைக்கும்.

Categories

Tech |