Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

திருநெல்வேலியில் பரபரப்பு!!…. கட்டையால் அடித்து”வியாபாரி படுகொலை” …. வலைவீசி தேடும் போலீஸ்….!!!!

வியாபாரியை   கொலை செய்த மர்ம நபர்களை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள தளபதிசமுத்திரம் மேலூர் பகுதியில்  ஜவகர்லால்
நேரு என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அதே பகுதியில் மளிகை கடை ஒன்றை வைத்து நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் நேற்று ஜவகர்லால்  நேரு தனது வீட்டின் முன்பு அமைந்துள்ள திண்ணையில் தூங்கிக்கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த சில மர்ம நபர்கள் ஜவகர்லால்  நேருவை கட்டையால் சரமாரியாக தாக்கி விட்டு தப்பி ஓடி விட்டனர். இதில் படுகாயம் அடைந்த ஜவகர்கலால் நேரு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார்.

இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் உடனடியாக காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர்      ஜவகர்லால்  நேருவின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் . இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியூள்ளது.

Categories

Tech |