ஆந்திர மாநிலம் கடந்த 2014 ஆம் ஆண்டு ஆந்திரா, தெலுங்கானா என இரண்டு மாநிலங்களாகப் பிரிக்கப்பட்டது. இதில் தெலுங்கானா மாநிலத்தில் 31 மாவட்டங்களும் ஆந்திர மாநிலத்தில் 13 மாவட்டங்களும் இருந்தன. இந்நிலையில் ஆந்திர மாநிலத்தில் உள்ள 13 மாவட்டங்களின் பரப்பளவும் அதிக அளவில் இருப்பதால் மக்கள் மாவட்ட தலைநகரங்களில் உள்ள அரசு சார்ந்த அலுவலகங்களுக்கு செல்ல மக்கள் வெகுதூரம் பயணிக்க வேண்டியுள்ளது. இதனால் மக்களின் நலனை கருத்தில் கொண்டு ஆந்திராவில் உள்ள ஒவ்வொரு மாவட்டத்தையும் இரண்டு மாவட்டங்களாக பிரித்து மொத்தம் 26 மாவட்டங்களாக மாற்றம் வேண்டும் என முதல்-அமைச்சருக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது. இதன்படி நெல்லூர் மாவட்டம், நெல்லூர், பொட்டி ஸ்ரீராமுலு என இரு மாவட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளன. அனந்தபுரம் மாவட்டம் அனந்தபுரம், சத்திய சாயி மாவட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது.
கடப்பா மாவட்டம், ஒய்.எஸ்.ஆர். கடப்பா, அன்னமய்யா மாவட்டங்களாகவும்,
குறிப்பாக சித்தூர் மாவட்டம் சித்தூர், பாலாஜி என இரண்டு மாவட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. இவற்றில் சித்தூர் மாவட்டத்திற்கு சித்தூர் தலைநகரமாகவும், புதிதாக உருவாகியுள்ள பாலாஜி மாவட்டத்துக்கு திருப்பதி தலைமையிடமாகவும் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இன்னிலையில் பாலாஜி என்பது வடமொழிச் சொல்லாக இருப்பதால் புதிதாக உருவாகியுள்ள மாவட்டத்திற்கு திருப்பதி என்றே பெயர் சூட்ட வேண்டுமென பலரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.