திருப்பதியில் இருந்து சென்னைக்கு செம்மரம் கடத்த முயன்ற 6 பேரை போலீசார் அதிரடியாக்க கைது செய்தனர் ..
திருப்பதியில் உள்ள வட மாலப்பேட்டை கோவில் அருகே 6 பேர் கொண்ட கும்பல் செம்மரங்களை காரில் ஏற்றிக் கொண்டு இருப்பதாக போலீசாருக்கு தகவல் தெரியவந்துள்ளது. இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் செம்மரங்கள் ஏற்றுக் கொண்டிருந்த கும்பலை சுற்றிவளைத்து கைது செய்தனர்.
இந்த விசாரணையில் நாகையிலுள்ள சீர்காழியை சேர்ந்த பாலசுப்பிரமணியன் (வயது 29) என்பதும், திருவள்ளூர் மாவட்டம் பாகசாலை கிராமத்தை சேர்ந்த 34 வயதான சரவணன் என்பதும், பள்ளி பேட்டையை சேர்ந்த ரமேஷ், சென்னை திருவேற்காட்டை சேர்ந்த ரமேஷ்(வயது 47), மற்றும் சஞ்சீவி (வயது 27), ராக்கி (வயது 29), ஸ்ரீஜித் (வயது 43) என்பதும், இவர்கள் அனைவரும் செம்மரங்களை கடத்த முயன்றவர்கள் என தெரியவந்துள்ளது.
மேலும் விசாரணையில் இவர்கள் சேஷாசலம் வனப்பகுதியில் இருந்து செம்மரங்களை வெட்டி காரில் சென்னைக்கு கடத்தி செல்ல முயற்சித்துள்ளனர்.மேலும் செம்மரக் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட 4 பைக், 1 வேன், காருடன் 11 செம்மரங்களை பறிமுதல் செய்து செம்மரக் கடத்தலில் முக்கிய புள்ளி யார்? என்றும் சென்னையில் எந்த இடத்திற்கு செம்மரங்களை கடத்தி செல்கிறார்கள் என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.