Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

“திருப்பதியிலிருந்து மதுரைக்கு கஞ்சா கடத்த முயற்சி”… கடத்த முயன்ற 2 நபரை கைது செய்த வேலூர் போலீசார்…!!!

வேலூரில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்ட போது ஆந்திராவில் இருந்து மதுரைக்கு கஞ்சா கடத்த முயன்ற இரண்டு நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வேலூர் மாவட்டத்தின் சரக டிஐஜி ஆனி விஜயா, வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணன் உள்ளிட்டோர் வேலூர் மாவட்டத்தில் உள்ள காவல் துறையினருக்கு கஞ்சா கடத்தல் தொடர்பாக கடும் நடவடிக்கைகளை எடுக்க அறிவுறுத்தியிருன்றனர். இந்நிலையில் குடியாத்தம் டவுன் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிலம்பரசன் தலைமையிலான தனிப்படை போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டிருந்த போது அந்த வழியாக சென்ற பஸ்ஸில் சந்தேகத்திற்கிடமான இரண்டு நபர்கள் இருந்தார்கள்.

அவர்களை விசாரணை செய்த போது அவர்களிடம் கஞ்சா இருந்தது தெரியவந்தது. இதனால் இருவரையும் கைது செய்து போலீசார் தீவிர விசாரணை நடத்தினார்கள். விசாரணை நடத்தியதில் அவர்கள் இருவரும் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த கோவில்பட்டியில் இருக்கும் சிந்தாமணி நகரைச் சேர்ந்த ராமசாமியின் மகன் ராமகிருஷ்ணன் என்பதும், பசும்பொன் நகரைச் சார்ந்த ஐயாதுரை என்பவரின் மகன் மகேஷ் குமார் என்பதும் தெரிய வந்தது. இவர்கள் ஆந்திரா மாநிலத்தில் உள்ள திருப்பதியிலிருந்து மதுரைக்கு கஞ்சா கடத்தி சென்றது தெரியவந்துள்ளது. இதனால் போலீசார் அவர்கள் இருவரையும் கைது செய்ததோடு அவர்கள் வைத்திருந்த 4 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தார்கள்.

Categories

Tech |