Categories
தேசிய செய்திகள்

திருப்பதியில் அதிகாரிகள் திடீர் ஆய்வு…. மேற்கொள்ளப்போகும் ஏற்பாடுகள் குறித்து விளக்கம்….!!

திருமலையில் பக்தர்கள் வசதிக்காக பல முக்கிய வசதிகளை தேவஸ்தான நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது.

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். தற்போது கோயிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது. 7-வது நாளான நேற்று கோவிந்தராஜா அலங்காரத்தில் சூரியபிரபை வாகனத்தில் மலையப்ப ஸ்வாமி காட்சியளித்தார். இதனை தொடர்ந்து திருமலை திருப்பதி தேவஸ்தான செயல் அதிகாரி டாக்டர் கே.எஸ்.ஜவகர் ரெட்டி மற்றும் சில மூத்த அதிகாரிகள் நேற்று திருமலையில் விரிவான ஆய்வு மேற்கொண்டனர்.

மேலும் இந்த ஆய்வில் திருமலையின் பல்வேறு நீர்த்தேக்கங்களில் இருந்து நீர் வருகிறது. இந்த சூழலில் பில்டர் ஹவுஸில் இருந்து வெளியேறும் நீரை ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை பரிசோதிக்க வேண்டும் என பில்டர் ஹவுசிங் செயல் அதிகாரி கூறினார். இதனைத் தொடர்ந்து பில்டர் ஹவுசிங்கின் சுற்றுப்புறம் தூய்மையாக இருக்க வேண்டும். தேவையற்ற பொருட்கள் அதனை சுற்றி கிடப்பதை தவிர்க்க வேண்டுமென ஜவகர் எட்டி அதிகாரிகளுக்கு வலியுறுத்தினார்.

இதனை தொடர்ந்து ஏஜென்சி, பாலாஜி பேருந்து நிலையம், எஸ்என்சி போன்ற இடங்கள் தூய்மையாக வைத்திருக்க வேண்டுமென செயல் அதிகாரி கூறினார். மேலும் தேவைப்படும் இடங்களில் கழிவறைகள், போக்குவரத்து நெரிசலை குறைக்க சூழல் ஏற்படுத்தப்பட வேண்டும் எனவும் அவர் கூறினார். மேலும் சில நடைபாதைகளில் டைல்ஸ்கள் பதிக்க வேண்டும் என வலியுறுத்தினார். இதனைத் தொடர்ந்து அதிகாரிகள் திருப்பதியில் மேற்கொள்ளப்படும் பல்வேறு வளர்ச்சித் திட்டங்கள் குறித்து செயல் அதிகாரி இடம் விளக்கினார். மேலும் திருமலையில் கோ மகா சம்மேளன நிகழ்வு நடைபெற உள்ளது. இதற்கான ஆய்வுகளையும் செயல் அதிகாரி ஜவஹர் ரெட்டி மேற்கொண்டார்.

Categories

Tech |