திருப்பதியில் ஏழுமலையானை தரிசிக்க, ஆன்லைன் டிக்கெட் பெற சுமார் 6 லட்சம் பக்தர்கள் ஒரே நேரத்தில் முயற்சி செய்ததால் இன்டர்நெட் சேவை முடங்கியுள்ளது.
திருப்பதியில் அக்டோபர் மாதத்திற்கான ஆன்லைன் டிக்கெட் சேவை தொடங்கியது. சுமார் 2.40 லட்சம் டிக்கெட்டுகள் நேற்று காலை 9 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்பட்டன. ஒரே நேரத்தில் நாடு முழுவதிலிருந்து சுமார் 6 லட்சம் பக்தர்கள் ஆன்லைனில் தரிசன டிக்கெட்டுகளை பெற முயற்சி செய்துள்ளனர். இதனால் இன்டர்நெட் சேவை முடங்கியது.
இதனை தொடர்ந்து திருப்பதி தேவஸ்தான ஊழியர்கள் இண்டர்நெட் சேவையில் ஏற்பட்ட பழுதை நீக்கினர் .இதையடுத்து வெளியிடப்பட்ட 2.40 லட்சம் தரிசன டிக்கெட்டுகளையும் சுமார் இரண்டு மணி நேரத்தில் பக்தர்கள் பதிவு செய்தனர். நேற்று மட்டும் திருப்பதி தேவஸ்தானத்தில் ஆன்லைன் டிக்கெட் பெற சுமார் ஒரு கோடி பக்தர்கள் முயற்சி செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.