கொரோனா இரண்டாவது அலைக்கு பிறகு, திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்ய ரூ.300 சிறப்பு தரிசன டிக்கெட் முன்பதிவு செய்தவர்கள் மற்றும் கல்யாண உற்சவத்திற்கு முன்பதிவு செய்த 20 ஆயிரம் பக்தர்கள் மட்டுமே தினமும் அனுமதிக்கப்பட்டு வந்தார்கள். இதனைத் தொடர்ந்து ஏழுமலையானை தரிசனம் செய்வதற்கு இலவச தரிசனத்திற்கு அனுமதிக்க வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.
இதற்கிடையில் தற்போது பாதிப்பு படிப்படியாக குறைந்து வருவதால் இலவச தரிசனத்தில் பக்தர்கள் அனுமதிப்பதாக தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. அதன்படி தினசரி 2000 பேருக்கு இலவச தரிசன டிக்கெட் வினியோகம் செய்யவுள்ளது. இதற்கான இலவச டிக்கெட் பெற விரும்புவர்கள் திருப்பதி பேருந்து நிலையம் எதிரே உள்ள சீனிவாசன் பக்தர்கள் ஓய்வு அறையில் காலை 8 மணி முதல் பெற்றுக்கொள்ளலாம். டிக்கெட்டுகளை பெற்ற பக்தர்கள் காலை 7 மணி முதல் இரவு 8 மணி வரை நேரம் ஒதுக்கீடு செய்து சாமி தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.