திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டதை அடுத்து சுவாமி தரிசனத்துக்கு பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இங்கு தினசரி ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சுசாமி தரிசனம் செய்து செல்கின்றனர். இந்த நிலையில் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சிபாரிசு கடிதம் கொண்டு வரும் பக்தர்களுக்கான தரிசனம் ரத்து செய்யப்படுவதாக கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
அதாவது இன்று (ஏப்ரல்.13) முதல் வரும் ஞாயிற்றுக்கிழமை வரை இந்த தரிசனம் ரத்து செய்யப்படுவதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. பக்தர்கள் கூட்டம் தொடர்ந்து அதிகரித்து வருவதால் கோவில் நிர்வாகமானது இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.